LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு IOCL அளிக்கும் 4 முக்கிய வசதிகள் இவைதான்!!
Indian oil இது குறித்து ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு 4 புதிய சேவைகளைத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வசதிகளை மனதில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன. - இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ் - மிஸ்டு கால் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு சேவை - 5 கிலோ எடை கொண்ட சின்ன சிலிண்டர் - காம்போ சிலிண்டர்களாக 14.4 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களையும் பெற்றுக்கொள்ளலாம்
வாடிக்கையாளர்களுக்கு இப்போது இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ் சிலிண்டர் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சிலிண்டர் அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜியின் உயர் தரத்தை வழங்கும். இது விரைவான சமையலுக்கு உதவும். மேலும் இதன் மூலம் சமயலுக்கான நேரத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் உணவின் தரமும் சிறப்பாக இருக்கும். (Photo: Facebook)
IOCL கொரோனா நெருக்கடியில், வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் சேவையைத் துவக்கியது. இதன் மூலம் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எந்த செலவும் இல்லாமல் மிஸ்ட் கால் மூலம் நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். இந்த வசதி ஐ.வி.ஆர்.எஸ் அமைப்பு வசதிபடாதவர்களுக்கும் முதியவர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் என்று இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. எல்பிஜி வாடிக்கையாளர்கள் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து சிலிண்டரை புக் செய்யலாம். இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்ய ஆகும் நேரத்தை மிச்சப்படுத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் இந்த அழைப்புக்கு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
இது தவிர, நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு காம்போ சிலிண்டர்களையும் வழங்கியுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவர்கள் 14.4 கிலோ சிலிண்டருடன் 14.4 கிலோ சிலிண்டரையும் பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர, சமையல் எரிவாயு அதிகம் தேவைப்படாதவர்களுக்காகவும், குடும்பத்தை விட்டு வெளியே தனியாக வசிக்கும் நபர்களுக்காகவும் 5 கிலோ குட்டி சிலிண்டர் (Chotu Cylinder) தொடங்கப்பட்டுள்ளது. இந்த 5 கிலோ சிலிண்டரை இண்டேனின் ஏஜென்சி அல்லது நிறுவனத்தின் பெட்ரோல் பம்பிலிருந்து வாங்கலாம்.