அடுத்த 147 நாட்கள் ஜாக்பாட்.. குருவால் இந்த ராசிகளுக்கு நிதி ஆதாயம் பெருகும்
மேஷம்: பணம் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை தேடி வரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்: பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சுப காரியங்கள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பணப்பற்றாக்குறை வரும் கவனம் தேவை.
மிதுனம்: திருமண சுபகாரியம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
கடகம்: சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். சொத்துக்களை விற்பனை செய்வதிலும் கவனம் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். வீண் அலைச்சல் வந்து போகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
சிம்மம்: திடீர் பணவரவு, எதிரிகளை வீழ்த்துவீர்கள், எதிலும் வெற்றிகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் கைகூடிவரும். வேலையில் இடமாற்றமும் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கன்னி: குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் வெற்றிகள் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தம்பதியர் இடையே சண்டை சச்சரவுகள் வந்துபோகும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.