Horoscope August 2022: இந்த மாதம் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்

Mon, 01 Aug 2022-8:52 am,

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கலவையான பலன்களைத் தரும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். இந்த மாதம் கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சுமாரகாவே இருக்கும்.

ரிஷபம்- இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இந்த மாதம் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை நடத்துவதில் வெற்றி பெறுவீர்கள். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். இருப்பினும், கேது, ராகு மற்றும் செவ்வாய் இணைந்த பார்வையால், நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மிதுனம்- இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். கல்வித்துறையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் நிதி வாழ்க்கை பக்கவலுவாக இருக்கும். வீட்டின் பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். காதல் உறவில் சில பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, பார்த்து பேசவும்.

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் பலனளிக்கப் போகிறது. குறிப்பாக கல்வித் துறையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலிலும் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதம் உங்கள் இயல்பில் உத்வேகத்தின் அதிகரிப்பு இருக்கலாம், இது சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆகஸ்ட் மாதத்தில் நிதி ரீதியாக அதிக லாபம் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம்.

 

சிம்மம் - இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைத்தாலும், சில இடங்களில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் பல்வேறு சுப பலன்களைப் பெறலாம். மாத தொடக்கத்தில், உங்கள் காதல், திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதேசமயம் தொழில், குடும்ப வாழ்க்கை போன்றவற்றின் பார்வையில் இந்த மாதம் உங்களுக்கு இனிமையானதாக இருக்கும்.

 

கன்னி- கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சனி உங்கள் குடும்ப வாழ்க்கையையும் இந்த மாதம் பாதிக்கலாம். காதல் உறவுகளிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக, இந்த மாதம் கன்னி ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். ஜாதகத்தில் புதனின் வலுவான நிலை இந்த மாதம் உங்கள் தொழிலில் வெற்றியை ஏற்படுத்தி தரும். 

 

துலாம்- இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சில ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். ராகு, செவ்வாய் இணைவதால் அங்காரக் யோகம் உருவாகி வருகிறது. இதனால் உங்கள் தொழில் மற்றும் திருமண வாழ்க்கையிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் நீங்கள் கவலைப்படலாம். குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு விஷயங்களில் தகராறு ஏற்படலாம், அதனால் உங்கள் மனதில் குழப்பம் ஏற்படலாம். கல்வி மற்றும் நிதித் துறையில் நீங்கள் சாதகமான முடிவுகளைப் பெறலாம்.

 

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்களைத் தரும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு கல்வியில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையும் மிகவும் இனிமையானதாக இருக்கும். இருப்பினும் விருச்சிக ராசிக்காரர்கள் உடல்நலம் சம்பந்தமாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு பல்வேறு துறைகளில் நல்ல பலன்களை பெறுவார்கள். உங்கள் ஜாதகத்தில் புதன் கிரகம் வலுவான நிலையில் உள்ளது. இதன் மூலம் தொழில் துறையில் புதிய உயரங்களைப் பெறலாம். வேலையில்லாதவர்களுக்கு இந்த மாதம் புதிய வேலை கிடைக்கும். கேது இருப்பதால், கல்வித் துறையில் சாதகமான பலன்களைப் பெற கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 

 

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். சனி மற்றும் வியாழன் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். செவ்வாயும், ராகுவும் இந்த மாதம் உங்களுக்கு அங்காரக் யோகத்தை ஏற்படுத்துவார்கள். இதன் காரணமாக, உங்கள் இயல்பில் ஒரு கடுமையான தன்மையும் இருக்கலாம். 

 

கும்பம்- இந்த ராசிக்காரர்கள் அனைத்துத் துறைகளிலும் நல்ல பலன்களைப் பெறலாம். புதன் மற்றும் சூரியன் இணைவதால் இந்த மாதம் உங்கள் வேலைகளில் வெற்றி கிடைக்கும். இது தவிர, உங்கள் காதல் துணையின் முழு ஆதரவையும் பெறலாம். வீட்டின் பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும், அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மன அமைதிக்கு, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். கணவன் மனைவியுடன் நிலவி வந்த தகராறு முடிவுக்கு வரும். 

 

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நல்ல செய்திகளைக் கொண்டு வரும். உத்தியோகத்தில் சாதகமான பலன்களைப் பெற்று வெற்றியடைவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link