குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் ஏப்ரல் 2024 வரை ஜொலிக்கும்
குரு பெயர்ச்சி: 2023 ஆம் ஆண்டில், குரு ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்தார், தற்போது மே 1, 2024 வரை மேஷ ராசியில் தான் இருப்பார். இது 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் 5 ராசிக்காரர்கள் மட்டும் பல நன்மைகளைப் தரும். எனவே அடுத்த 11 மாதங்களுக்கு எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: அடுத்த வருடம் வரை இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய சுப பலன்களைத் தரும். பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், உதவியாலும் வெற்றி பெறுவீர்கள். தடைகள் நீங்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி வெற்றியைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் பெருகும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி: குரு ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
துலாம்: குரு சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பண லாபத்தை தரும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள முடியும். புதிய சொத்து-வாகனம் போன்றவற்றை வாங்கலாம்.
மீனம்: மீனத்தில் குரு சஞ்சாரம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும், இதன் காரணமாக நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். மூத்த அதிகாரிகள் உதவுவார்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்களை வாங்கலாம். சுற்றுலா செல்லலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.