குரு உச்சம் செல்கிறார்.. 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Wed, 11 Oct 2023-8:44 am,

குருவால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்: 2024 ஆம் ஆண்டில், தேவகுரு வியாழன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 1, 2024 அன்று, மதியம் 12:59 மணிக்கு, வியாழன் மேஷ ராசியிலிருந்து ரிஷபத்திற்கு மாறுகிறார். அதன் பிறகு ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதே நேரத்தில், வியாழன் அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்து பின்னர் பிப்ரவரி 4, 2025 வரை இதோ நிலையில் தான் நகரும். இதற்குப் பிறகு, பிப்ரவரி 4 அன்று வக்ர நிவார்த்தி அடைந்து மே 14 (இரவு 10:36 மணி), 2025 வரை ரிஷபத்தில் சஞ்சரிப்பார். இபோது ரிஷபத்தில் மாறுவதால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யார் யார் என்று இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி 2024: குரு ஒவ்வொரு ராசியிலும் தங்குவதற்கு 13 மாதங்கள் ஆகும். தற்போது மேஷ ராசியில் அமர்ந்துள்ளார், ஆனால் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில், குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அதிர்ஷ்டமாக அமையப் போகிறது.

மேஷ ராசி: வரும் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பணத்தையும் தரப் போகிறது. இந்தக் காலக்கட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். இவர்கள் பேச்சால் மக்களைக் கவர்வதில் வெற்றி பெறுவார்கள். குரு உங்கள் சேமிப்பை பெரிதும் உயர்த்துவார், இது அனைத்து வகையான கடன்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைப் பேறு பெற விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மரியாதை பெறுவீர்கள். வியாபாரத்தில் பெரும் லாபம் உண்டாகும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள்.

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் மற்றும் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கார், நிலம் போன்றவற்றை வாங்கலாம். அதே நேரத்தில், திருமணமாகாதவர்கள் திருமண கூட்டணியில் நுழையலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link