குரு பெயர்ச்சி... 2025ம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் சில ராசிகள் இவை தான்
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவர் கடந்த மே 1, 2024 அன்று ரிஷப ராசிக்குள் நுழைந்தார். அவரது அடுத்த பெயர்ச்சி சுமார் 1 வருடத்திற்குப் பிறகு அதாவது 2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி நடைபெறும். அப்போது அவர் மிதுன ராசியில் பெயர்ச்சி அடை வார்.
மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம். இதனால், மிதுனத்தில் குரு பெயர்ச்சியின் பலன் கலவையாகதாக இருக்கும். இதனால், சில ராசிக்காரர்களுக்கு இது புதிய சவால்களைக் கொண்டுவரும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
குரு பகவான் ரிஷப ராசியில் தற்போது வக்ர நிலையில் உள்ளார். அவர் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவதற்கு முன்னார், 2025 பிப்ரவரி மாதம் குரு வக்ர நிரவ்த்தி அடைவார். பிப்ரவரி மாத வக்ர நிவர்த்தியும், அதனை தொடர்ந்து நடக்கும் மே மாத குரு பெயர்ச்சியும் 2025 ஆம் ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக இருக்கும்.
புதனின் ராசியில் நடக்கும் குரு பெயர்ச்சியினாலும், பிப்ரவரி மாத வக்ர நிவர்த்தியினாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிக பலனை அடைந்து சொழிப்பாக இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். புத்தாண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த ராசியினருக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். திடீர் பண ஆதாயங்கள் இருக்கலாம். சொத்து வாங்கும் யோகம் அதிகரிக்கும்.. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
சிம்மம்: குரு பெயர்ச்சியின் சுப பலன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். உங்கள் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும், உங்கள் புகழ் உயரும். குடும்பத்தினருடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். சில நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.
தனுசு: குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் மிகவும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் உங்கள் உறவு வலுவடையும். உங்களை வாட்டி வந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு Zee News பொறுப்பேற்காது.