கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
மேஷ ராசியினருக்கு இப்போது நல்ல காலம் பிறந்துள்ளது. அனைத்து வகையிலும் பலனடைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
கிரகங்களின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமான நேரத்தைக் கொண்டு வருகிறது. இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். அலுவலக பணியில் இருக்கும் மக்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தெடி வரும். உடல் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில், கடக ராசியின் நான்காவது மற்றும் 11 ஆவது வீட்டிற்கு அதிபதியாக சுக்கிரன் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை மகிழ்ச்சியான உறவு, திருமண நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். மரியாதையும் அதிகரிக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். அதிகப்படியான வேலை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனுடன், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியாக கருதப்படுகிறார். எனவே, சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சமூகத்தில் அவர்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்கள் திறமை மக்களை ஈர்க்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)