Tamanna: லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் ஆபாசமாக நடித்துள்ளாரா தமன்னா?

Tue, 06 Jun 2023-7:37 pm,

பாலிவுட்டின் பிரபல படங்களுள் ஒன்றான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.

 இந்த படத்தில், மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா, விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். 

4 வித்தியாசமான கதைகளை படமாக ஆந்தாலஜி படம்தான், லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகம் 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பெயரில் பல பாலிவுட் நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ளது. பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்வதுதான் படத்தின் கதை. 

இந்திய நெட்ஃப்ளிக்ஸின் யூடியூப் தளத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் தமன்னா படு கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

சமீப காலமாக தமன்னா நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாமல் இருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அப்படி நடிக்கிறார். 

தமன்னா, விஜய் வர்மா என்ற நடிகரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரே இந்த படத்தில் தமன்னாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 

சிலருக்கு தமன்னாவின் இந்த மாற்றம் பிடித்திருந்தாலும். ஒரு சிலர் இது குறித்து குறை கூறி வருகின்றனர். தமன்னா, தற்போது ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link