கஜலட்சுமி யோகத்தால் குபேர யோகம்: சுக்கிரன் அருளால் இந்த ராசிகள் மீது பண மழை
)
சுக்கிரன்: சுக்கிரன் மிக முக்கியமான ஒரு கிரகமாக கருதப்படுகிறார். பேச்சாற்றல், சாதுர்யம், உலக இன்பங்கள், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக அவர் உள்ளார். சுக்கிரன் கிரகம் மகிழ்ச்சி, ஒளிமயமான வாழ்க்கை மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறார்.
)
கஜலட்சுமி யோகம்: கடகத்தில் சுக்கிரனின் பெயர்ச்சியால் கஜலட்சுமி யோகம் உருவாகி வருகிறது. ஜோதிடத்தில் இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
)
ராசிகளில் தாக்கம்: சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்து. எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இதனால் உருவாகும் கஜகட்சுமி ராஜயோகத்யால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகத்தால் நற்பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் என்ன திட்டம் போட்டாலும் அது நிறைவேறும். பேச்சுத்திறமையால், நீங்கள் மக்கள் மத்தியில் ஈர்ப்பு மையமாக மாறுவீர்கள். இந்த நேரம் வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பண லாபத்தால், பொருளாதார நிலை வலுப்பெறத் தொடங்கும்.
கடகம்: கடக ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது அந்த ராசிக்காரர்களுக்கு சுப மாற்றங்களை ஏற்படுத்தும். கஜலக்ஷ்மி ராஜயோகத்தின் பலன் காரணமாக வருமானம் பெருகும், பணத்திற்கான புதிய வழிகள் திறக்கும். இந்த காலத்தில் நீங்கள் சேமிக்கவும் முடியும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.
கன்னி: சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த காலத்தில், மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு காரணமாக, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும், முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாக இந்த நேரம் இது.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் சுப பலன்களை அள்ளித் தரும். புதிய வேலைக்கான தேடல் நிறைவேறும், பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். கூட்டு சேர்ந்து செய்யும் தொழில் லாபகரமாக இருக்கும். இந்த நேரத்தில் புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்லன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.