கெத்தான சைவ கொத்து பரோட்டா! மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலே சமைக்கலாம்
சைவ கொத்து பரோட்டாவை வீட்டிலேயே சுலபமாக, ஆனால் அருமையான ருசியில் சுவையுடன் சமைக்கலாம். தேவையான பொருட்களும் வீட்டில் இருப்பவையே. மைதா பரோட்டாவாக இருந்தாலும் சரி, கோதுமை பரோட்டாவாக இருந்தாலும் பரவாயில்லை
பரோட்டா, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு கலவை, மசாலாக்கள் என வீட்டில் இருக்கிற பொருட்களே போதும்
கொத்துப் பரோட்டாவுக்கு கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி அவசியம் தேவை
தேங்காய் பால் இருந்தால், கொத்து பரோட்டாவின் சுவை அருமையாக இருக்கும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அப்போது, கொஞ்சம் க்ரீம் சேர்த்துக் கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை வதக்கி, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் கரம் மசாலா, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும், தேவையான உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும்
கலவை நன்றாக கொதித்த பிறகு, பொடிப்பொடியாக பொடித்த பரோட்டாவை சேர்க்கவும், மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வரை சமைக்கவும்.
கெத்தான கொத்து பரோட்டா ரெடி! கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும். தயிருடன் சாப்பிட சுவையான பரோட்டா ரெடி