Mahaparinirvan Diwas: டாக்டர் அம்பேத்கர் தொடர்பான முக்கிய விஷயங்கள்

Sun, 06 Dec 2020-1:10 pm,

“உரிமைகள் என்பவை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை. சமூகத்தின் சமூக உணர்வு மற்றும் நெறி உணர்வு ஆகியவற்றால்தான் பாதுகாக்கப்படுகின்றன” என உரிமைக்கு குரல் எழுப்பிய அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று. டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6ஆம் நாளான்று இயற்கை எய்தினார். இந்த தினம் மஹாபரினிர்வன் திவாஸாக அனுசரிக்கப்படுகிறது. 

இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர். அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர் டாக்டர் அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கருக்கு இந்தி, பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், மராத்தி, பெர்சியன், குஜராத்தி என 8 மொழிகள் தெரியும்.  

 டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் தொழிலாளர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளார். 12 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக 1 குறைத்தார். மேலும், தொழிலாளர்களுக்கு, விடுமுறை, காப்பீடு, மருத்துவ விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படை தேவைகளை கொண்டுவந்தார். 

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் பி.ஆர். அம்பேத்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.  டாக்டர் அம்பேத்கருக்கு இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, இவரது இறப்புக்குப் பிறகு 1990-இல் வழங்கப்பட்டது. 

மத்திய பம்பாய் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்ட தோற்றுப்போன அம்பேத்கர், பலரின் ஆதரவால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரைப் பின்தொடர்பவர்களில் லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதி மும்பையின் தாதரில் உள்ள சைத்யபூமிக்கு (Chaityabhoomi) சென்று அண்ணல் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link