குருவோட கைகோர்த்த குபேரன்.. செல்வ மழையில் நனைய போகும் ராசிகள் இவையே
குரு பகவான் வக்ரப்பயணம்: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். வரும் செப்டம்பர் நான்காம் தேதி அன்று குரு பகவான் வக்ரப்பயணம் மேற்கொள்ள உள்ளார். குரு பகவானின் வக்ர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். இருப்பினும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்கள் குருவின் வக்ர பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உருவாகும் விபரீத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. வாழ்க்கை துணைக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
மேஷ ராசி: குருபகவான் மேஷ ராசியில் இருக்கின்ற காரணத்தினால் தலைகீழ் மாற்றத்தை உங்கள் ராசியில் ஏற்படுத்தப் போகிறார். சுப பலன்களை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார். வருமானத்தில் இந்த குறையும் இருக்காது.
கடக ராசி: குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகிறார். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிம்ம ராசி: உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தரும்.
தனுசு ராசி: குருபகவான் உங்களுக்கு பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். திடீர்னு நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நிலுவையில் இருந்த சொத்து சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் நிறைவேறும்.
மீன ராசி: உங்களுக்கு நல்ல பலன்கள் கொடுக்கப் போகின்றது. குருபகவான் உங்கள் ராசியில் பண வீட்டில் வக்ரம் அடைந்துள்ளார். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலையில் எந்த பாதிப்பும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.