உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய படிவங்கள் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள்
அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஓய்வூதியதரர்களுக்கான முக்கியமான அப்டேட் ஒன்று வந்துள்ளது. தேவையான ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இயலாத ஊழியர்களுக்கான ஓய்வூதிய கோரிக்கைகளை செயலாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் முதலில் 28 அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட்டன. எனினும், இந்த விதிகள் தொடர்ந்து பின்பற்றப்படவில்லை என்ற புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், இவற்றின் அம்சங்கள் இப்போது மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.
மேற்கண்ட விதிகள் அமைச்சகங்கள் / துறைகளால் கண்டிப்புடன் பின்பற்றப்படவில்லை என்பதும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / குடும்ப உறுப்பினர்களிடமிருந்து குறைகள் பெறப்படுவதும் கவனிக்கப்படுகிறது என்று அலுவலக குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் அடிப்படையில் உள்ள இந்த வழிகாட்டுதல்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஓய்வூதிய கிளெய்ம்களைப் பெறுவதற்கான செயல்முறையை தெளிவுபடுத்துகின்றன. கிளெய்ம்கள் குறிப்பிட்ட விதிகளின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
DoPPW, இந்த வழிகாட்டுதல்கள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து அமைச்சகங்களையும் துறைகளையும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் குறைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, கீழ்நிலை அலுவலகங்கள் உட்பட அவர்களது அலுவலகங்களில் ஓய்வூதியம் தொடர்பான விஷயங்களைக் கையாளும் பணியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருமாறும் வழிகாட்டுதல்கள் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சீரான மற்றும் சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்வதை வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தாமதங்கள் அல்லது சிக்கல்களைத் தடுக்க இந்த நடைமுறைகளுக்கு இணங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நினைவூட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.