கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. OMC -கள் வணிக ரீதியான LPG சிலிண்டர்களின் விலையை சற்று உயர்த்தியுள்ளன. இப்போது 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டருக்கு 8.5 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
சென்னையில் ரூ.1809.50 ஆக இருந்த வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது ரூ.1817 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் சிலிண்டர் விலை ரூ.1756 -இலிருந்து ரூ.1764.50 ஆகவும், மும்பையில் ரூ.1598 -இலிருந்து ரூ.1605 ஆகவும், டெல்லியில் ரூ.1646 -இலிருந்து ரூ.1652.50 ஆகவும் விலைகள் அதிகரித்துள்ளன.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். நேற்றோடு காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், இன்று முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய அபராதம் விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இதை விட குறைவாக இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
புதிய விதியின் கீழ், இந்திய தர நிர்ணய பணியகத்தால் (பிஐஎஸ்) சான்றளிக்கப்பட்ட பாதணிகள் மட்டுமே இப்போது விற்பனை செய்யப்படும். இதன் காரணமாக வாடிக்கையாளர் அதிக விலை கொடுக்க நேரிடும். BIS சான்றிதழைப் பெற, உற்பத்தியாளர்கள் பல தர நிலைகளைப் பின்பற்ற வேண்டும், இது அவர்களின் செலவுகளை அதிகரிக்கும். இதனால் காலணிகளின் விலையும் உயரும்.
ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை, நிறுவனங்கள் NPCI நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்டாக்குகளுக்கான KYC ஐ புதுப்பித்தல் மற்றும் 5 ஆண்டுகளுக்கும் மேலான Fastagகளை மாற்றுதல் ஆகியவை அடங்கும். இந்த செயல்முறை ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல் தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் அக்டோபர் 31 க்கு முன் KYC ஐப் புதுப்பிக்க வேண்டும்.
HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகளை மாற்றுகிறது. Paytm, Mobikwik, Freecharge போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் கட்டணம் செலுத்தினால், அதற்கு ஒரு சதவீதம் கட்டணம் விதிக்கப்படும். இது அதிகபட்சம் 3,000 ரூபாய் என்ற வரம்பில் மட்டுப்படுத்தப்படும். கல்வி பரிவர்த்தனைக்கும் ஒரு சதவீதம் கட்டணம் விதிக்கப்படும். ஒரு மாதத்தில் 15,000 ரூபாய்க்கு மேல் எரிபொருள் நிரப்பினால், ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான ஏதேனும் பணியை நீங்கள் திட்டமிட்டிருந்தால், ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்களை தெரிந்துகொள்வது நல்லது. ஆகஸ்டில் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனினும், இந்த நாட்கள் மாநிலங்களை பொறுத்து மாறுபடும்.
கூகுள் மேப்ஸ் தனது சேவைக் கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் 70 சதவீதம் வரை குறைக்கும். மேலும், இதற்கான பில்லிங் டாலரில் இருந்து ரூபாய்க்கு மாறும். எனினும், இதனால் வழக்கமான பயனர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது.
ஆகஸ்ட் 1, அதாவது இன்று முதல் பல முக்கிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் பலரது அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால் இவற்றை பற்றிய முழுமையான தகவல்களை வைத்திருப்பது நல்லது.