ஜனவரி 1, 2023: பல முக்கிய விதிகளில் மாற்றம், உங்கள் வாழ்வில் இருக்குமா இதன் தாக்கம்?
நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், உங்கள் ரிவார்டு புள்ளிகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மீட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில் அவை காலாவதியாகிவிடும். இது தவிர, எச்டிஎஃப்சி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளின் ரிவார்டு பாயிண்ட்கள் தொடர்பான விதிகளும் ஜனவரி 1 முதல் மாறுகின்றன.
பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை நீங்கள் இன்னும் செய்து முடிக்கவில்லை என்றால் உடனடியாக செய்துவிடுங்கள். இருப்பினும் அதை இணைப்பதற்கான வரம்பு ஏப்ரல் 2023 ஆகும். ஆனால் வங்கி தொடர்பான தொல்லைகளைத் தவிர்க்க, இந்த வேலையை விரைவில் முடிப்பது நல்லது.
ஜனவரி 1, 2023 முதல், Windows 7 மற்றும் 8.1க்கான புதிய Chrome பதிப்புகளுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு நிறுத்தப்படும். அதாவது, இந்த பதிப்புகளைக் கொண்ட மடிக்கணினிகளில் இனி பயனர்கள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்த முடியாது. இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த ஆதரவு 7 பிப்ரவரி 2022 அன்று மூடப்படும்.
புத்தாண்டிலிருந்து அதாவது ஜனவரி 1, 2023 முதல், கார்டு எண் மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்களை கூகுள் சேவ் செய்து வைக்காது. ஆன்லைனில் கட்டணம் செலுத்தும்போது இவற்றை நீங்கள் கைமுறையாக உள்ளிட வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்துவதை பாதுகாப்பானதாக மாற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல், ரிசர்வ் வங்கி மூலம் லாக்கர் வசதி வைத்திருக்கும் அனைவருக்கும் ஒப்பந்தம் தயார் செய்யப்படும். இதில் வாடிக்கையாளர்கள் கையெழுத்திட வேண்டும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, தங்கள் லாக்கர் ஒப்பந்தத்தில் ஏதேனும் நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளதா என்பதை வங்கிகள் முடிவு செய்யும்.
ஜிஎஸ்டி விதிகளும் ஜனவரி 1 முதல் மாறும். 5 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள வணிகர்கள் மின் விலைப்பட்டியல்களை (இ-இன்வாய்ஸ்) உருவாக்குவது இப்போது அவசியமாகிறது.
இது தவிர, அனைத்து தொலைபேசி உற்பத்தியாளர்களும், அவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் 1 ஆம் தேதி முதல் அனைத்து தொலைபேசிகளின் IMEI எண்ணைப் பதிவு செய்வது அவசியமாகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மறுஆய்வு செய்யப்படுகிறது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்கின்றன அல்லது அதிகரிக்கின்றன.