ஓய்வூதியம் டெபாசிட் ஆகவில்லையா? கவலை வேண்டாம்... இதுதான் காரணம், இப்படி சரி செய்யலாம்

Tue, 03 Dec 2024-2:55 pm,

ஓய்வுதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டிய காலக்கெடு நவம்பர் 30 அன்று முடிந்துவிட்டது. ஆனால், சில ஓய்வூதியதாரர்கள் சில பல காரணங்களால் இன்னும் இதை சமர்ப்பிக்காமல் உள்ளனர். எனினும், அவர்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம். ஆனால், அதை எளிய வழியில் சரி செய்யலாம். அதை பற்றி இங்கே காணலாம்.

நீங்கள் சரியான நேரத்தில் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால், முதலில் அதை விரைவில் சமர்ப்பிக்க முயற்சிக்கவும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்க, வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் (CSC) ஆயுள் சான்றிதழை டெபாசிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல வங்கிகள் நவம்பர் 30 க்குப் பிறகும் அதை ஏற்றுக்கொள்கின்றன.

 

டிஜிட்டல் சமர்ப்பிப்பு: ஜீவன் பிரமான் செயலி அல்லது போர்ட்டலைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இதற்கு பயோமெட்ரிக் சாதனம் தேவைப்படும். இது உங்கள் வீட்டில் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

 

ஆஃப்லைனில் சமர்ப்பித்தல்: உங்களால் வாழ்க்கைச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால், அருகிலுள்ள ஓய்வூதியம் வழங்கும் கிளையில் அதை ஆஃப்லைனில் நேரடியாக சென்று சமர்ப்பிக்கலாம். மேலும், அப்படி செல்லும் போது உங்களின் ஓய்வூதிய விவரங்களை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

 

ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணம், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்காததுதான். உங்கள் ஓய்வூதியm கிடைக்க தாமதமானால், முதலில் உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்கவும். பிரச்சனை மேலும் தொடர்ந்தால், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியைத் தொடர்புகொண்டு நிலைமையை தெளிவுபடுத்தவும்.

உங்கள் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருந்தால், உடனடியாக உங்கள் ஓய்வூதியம் வழங்கும் வங்கி அல்லது அதிகார அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும், அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் ஓய்வூதியம் அளிக்கும் செயல்முறை மீண்டும் தொடங்கப்படுகிறது.

உடல்நலக் காரணங்களால் அல்லது இயக்கத்தில் சிரமம் காரணமாக உங்களால் வங்கிக்குச் செல்ல முடியவில்லை என்றால், வீட்டு வாசலில் கிடைக்கும் பொதுத்துறை வங்கிகளின் டோர்ஸ்டெப் வங்கிச் சேவையைப் பயன்படுத்தவும். இந்த சேவையில், பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி உங்கள் வீட்டிலேயே வழங்கப்படுகிறது.

ஆயுள் சான்றிதழை தாமதமாக சமர்ப்பித்தால் அபராதம் உண்டா? இல்லை, ஆனால் சரியான நேரத்திற்குள் இதை சமர்ப்பிக்காவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.

வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியுமா? ஆம், டிஜிட்டல் லைஃப் சான்றிதழை (DLC) சமர்ப்பிக்கும் வசதி ஆண்டு முழுவதும் உள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link