கடலின் அருகே கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும் மாளவிகா மோஹனன்!

Mon, 31 Jan 2022-8:38 pm,

ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்த மாளவிகா மோஹனன் கடந்த 2019ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

அதனையடுத்து கடந்த ஆண்டு தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.  படங்களின் மூலம் பிரபலமானதை விட சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் மூலம் தான் அதிக பிரபலமாகியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பல பல புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை பரபரப்பாக்கி விடுவார்.  சமீபகாலமாக இவரது விதவிதமான போஸ்கள் பலரையும் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கடலுக்கு அருகில் பிங்க் நிற பிகினி அணிந்து கொண்டு இவர் இன்ஸ்டாவில் பதிவேற்றி இருக்கும் புகைப்படங்கள் பலரையும் இவர் பக்கம் ஈர்த்து வருகிறது.  இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதயம் மற்றும் நெருப்பு எமோஜிகளால் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link