ஆண்மையை அதிகரிக்கும் `Testosterone` ஹார்மோனை அதிகரிக்க டயட்டில் இவற்றை சேர்க்கவும்
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலுறவுக்கான ஆசையை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தியை சரியாக வைத்திருப்பதோடு, தாடி, மார்பு போன்ற ஆண்களின் உடலில் தோன்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஜிம்முக்கு செல்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நல்ல டயட் எடுக்க ஆரம்பித்தால், அவர்களின் தசைகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் இரண்டு மடங்கு வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். இரவில் நாம் தூங்கும் போது, நம் மனம், இதயம் மற்றும் உடல் மிகவும் அமைதியான முறையில் வேலை செய்யும்.
முளை கட்டிய பாசிப்பருப்பு, முளை கட்டிய கொத்துக் கடலை ஆகியவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ளவத்ன் மூலம், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அவகேடோ சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு பாதி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனை உட்கொள்வதன் மூலம் நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைக் குறைக்க உதவுகிறது.
காலையில் எழுந்த பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் எளிதில் அகற்றப்படும். மேலும் நாள் முழுவதும் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், தண்ணீர் மற்றும் குடலின் உதவியுடன், அது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அந்த உணவின் மூலங்களைச் சென்றடைய உதவுகிறது.