Manchurian Ban: கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்படுவது ஏன்? அதிர்ச்சியூட்டும் உணவுக் காரணங்கள்!

Sat, 24 Feb 2024-4:00 pm,

கோவாவின் மபுசா நகரில், கோபி மஞ்சூரியன் தயாரிப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், அங்கு  பயன்படுத்தப்படும் செயற்கை நிறம், தரமற்ற சாஸ் காரணமாக, சுகாதார பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது

 

தொடர்ந்து பல இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி, நோட்டீஸ் வழங்கியது. அதையடுத்து அம்மாநில அரசு, கோபி மஞ்சூரியனுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.

 

கோபி மஞ்சூரியனை தயாரிப்பதில், தரமற்ற சாஸ், செயற்கை வண்ணம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இதனை அடுத்து கோவாவை போன்று கர்நாடகாவிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோபி மஞ்சூரியனை தயாரிக்க பயன்படுத்தும் மைதா, சாஸ்கள் மனிதர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. உடலில் சோடியம் அளவை அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு, சிறுநீரக பிரச்னை, இதய அடைப்புக்கும் இவை வழிவகுக்கும்.

கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனில் ரசாயனம், தரமற்ற சாஸ் பயன்படுத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து, சில இடங்களில் இருந்து கோபி மஞ்சூரியன் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அறிக்கையில் ரசாயனம் கலந்திருப்பது உண்மையானால், தடை செய்வது குறித்து யோசித்து வருவதாக ஆளும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

அளவுக்கு அதிகமாக ரசாயனங்கள் பயன்படுத்தினால், ஒவ்வாமை, மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய் ஏற்படும்

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link