ரிஷபத்தில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்! ‘இந்த’ ராசிகளுக்கு குபேரயோகம்!
ஆளுமைப் பண்பு, உற்சாகம், தைரியம், வலிமை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறது. புத்தாண்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், சில ராசிகள், பெரும் பண ஆதாயத்தை பெற்று ராஜ யோக பலனை ஆடைவார்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ர பெயர்ச்சியிலால், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். படிப்பில் வெற்றி பெறுவீர்கள்.
செவ்வாயின் அருளால் கும்ப ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் புதிய அடையாளத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்விப் பணிகளில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். நிலம், சொத்து, வாகனப் பேரங்களில் பெரும் லாபம் கிடைக்கும். இந்த விஷயத்தை வைத்து இவர்கள் நிறைய லாபம் சம்பாதிப்பார்கள்.
செவ்வாயின் வக்ர நிவர்த்தியின் மூலம், மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான திருப்பம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். வியாபாரிகள் வெற்றி பெறுவார்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்களின் பதவி உயர்வு இருக்கும். பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும்.
செவ்வாயில் வக்ர நிவர்த்தியினால், கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரம் மற்றும் வேலையில் அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் உறவு மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)