Maruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சு - விலை என்ன தெரியுமா?
இதே ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் புதிதாக சிஎன்ஜி காரையும் மாருதி அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது உள்ள பெட்ரோல் காரின் வடிவமைப்பிலேயே இந்த காரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்விப்ட் காரில் முன்பக்கம் பியானோ ஃபினிஷ் செய்யப்பட்ட முன்பக்க கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டுகள் எல்இடி டிஆர்எல், புதிய எல்இடி டெய்ல் லைட், புதிய முன் பக்கம் மற்றும் பின்பக்க பம்பர்கள் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
புதிய மாருதி ஸ்விப்ட் என்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இஸட் சீரியஸ் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 எச்பி பவரையும் 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு அறிமுகமாகிறது.
தற்போது உள்ள பெட்ரோல் காரை பொறுத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷனில் 24.80 கிலோமீட்டர் மைலேஜ், ஏஎம்டி கியர் ஆப்ஷனில் 25.75 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வரும்போது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த கார் அறிமுகப்படுத்தும்போது இப்போது மார்க்கெட்டில் இருக்கும் கார்களிலேயே அதிக மைலேஜ் கொண்ட காராக அது இருக்கும். தற்போது 4ம் தலைமுறை புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 6.49 லட்சம் முதல் ரூபாய் 9.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இதன் சிஎன்ஜி வேரியன்ட் விற்பனைக்கு வரும்போது இது பெட்ரோல் வேரியன்ட் காரை விட ரூபாய் 90 ஆயிரம் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வேரியன்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷனும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ஸ்விஃப்ட் கார் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு வந்தால் ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள டாடா டியாகோ மற்றும் ஹுண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களின் சிஎன்ஜி வேரியண்ட் உடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா டியாகோ சிஎன்ஜி காரைப் பொறுத்தவரை மார்க்கெட்டிலேயே ஆப்ஷன் கொண்ட ஒரே ஹேட்ச்பேக் சிஎன்ஜி காராக இருக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.