கொனார்க் சூரியக் கோவிலின் அற்புதமான அழகு புகைப்படங்களில்…

Wed, 31 Mar 2021-4:21 pm,

ஒரிசாவின் ஜகந்நாத் பூரிக்கு வடகிழக்கில் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொனார்க் நகரில் அமைந்துள்ள இந்தியாவின் சில சூரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கொனர்க் கோயில் பல புராண நம்பிக்கைகள் கொண்டது, உலகளவில் பிரபலமானது. இந்த கோவிலைக் காண உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள்.

இடைக்கால கட்டிடக்கலைக்கு அற்புதமான எடுத்துக்காட்டு Konark. 1984 ஆம் ஆண்டில் இதை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது யுனெஸ்கோ. கோனார்க் கோயிலின் கருவறையில் உள்ள சூரியக் கடவுளின் தரிசனம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த கோவிலில் 52 டன் மிகப்பெரிய காந்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கோனர்க் கோயிலின் உச்சியில் 52 டன் காந்த கல் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த காந்தக் கல் கடலின் ஆக்ரோஷத்தினால் கோவிலுக்கு ஏற்படக்கூடிய சிதைவை தடுத்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே, இன்னமும் இந்த கோயில் கடலோரத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.  

இருப்பினும், கோயிலின் இந்த சக்திவாய்ந்த காந்த அமைப்பு நவீன காலத்தின் ஆரம்பத்தில் ஒரு பிரச்சினையாக மாறத் தொடங்கியது. காந்த சக்தி மிகவும் வலுவாக இருந்ததால் கடலில் செல்லும் கப்பல்கள் கோயிலை நோக்கி ஈர்க்கப்பட்டன. 

இதனால் பிரிட்டிஷ் காலத்தில், கப்பல் போக்குவரத்தை பராமரிப்பதற்காக கோயிலில் இருந்த காந்தம் அகற்றப்பட்டது. ஆனால் காந்தம் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. அதுவும் ஒரு மர்ம முடிச்சாகவே தொடர்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link