செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2024: நாளை முதல் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்

Thu, 14 Mar 2024-5:49 pm,

செவ்வாயின் ராசி மாற்றம் மேஷ ராசியினருக்கு சிறப்பானதாக அமையும். செல்வம் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவுகள் மேம்படும். நிதி பிரச்சனைகள் நீங்கும். அனைத்து பணிகளும் நிறைவேறும், உடல் நலம் மேம்படும். 

கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சியாகும் இவ்வேளையில் ரிஷப ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டு மற்றும் அரசியலில் தொடர்புடையவர்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். நிதி சிக்கல்கள் வரலாம், ஆனால், பண வரவும் இருக்கும். 

மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிரமங்களை சந்திப்பீர்கள். உறவினரிகளுடன் சண்டைகள் வரக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிலுவையில் உள்ள பழைய பணிகள் அனைத்தும் முடிவடையும்.

உடல்நலம் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. மனதில் ஏதோ ஒரு அச்சம் தோன்றக்கூடும். இறைவழிபாட்டால் தைரியம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம், ஆகையால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 

கும்ப ராசியில் செவ்வாயின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. பல வழிகளில் நன்மைகள் நடக்கும். சில சிரமங்களை நீங்கள் எதிர்கொள்ளலாம். எனினும், துணிவுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். 

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் இப்போது தீரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் சில சிக்கல்களை அளிக்கலாம். குழந்தைகள் மற்றும் குடும்பம் பற்றிய கவலைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். நீங்கள் யாரிடமும் பேச விரும்ப மாட்டீர்கள். எரிச்சலான மன நிலை இருக்கும். இறை வழிபாடு துணையிருக்கும். துணிவுடன் செயல்பட்டால் நிலைமையை சரி செய்யலாம். 

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். அனைத்து விதமான தொல்லைகளும் நீங்கும். 

தனுசு ராசிக்காரர்களுக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் நன்மைகள் நடக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். உடல் நலனில் அதிகப்படியான அக்கறை தேவை. கடன் தொல்லை நீங்கும். நிதி நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மகர ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். பணம் சேமிப்பதில் சிரமம் உண்டாகும். வேலை சம்பந்தமான பிரச்சனைகளும் இருக்கும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். செல்வச் செழிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மனைவியுடன் உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

மீன ராசிக்காரர்களும் செவ்வாய் பெயர்ச்சியால் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவார்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெறலாம். நிதி நன்மைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link