சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், வெற்றி மேல் வெற்றி
சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாமல், நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகியவற்றுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் உள்ளது.
சனி நட்சத்திர பெயர்ச்சி: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படும் சனி பகவான் ஏப்ரல் 06, சனிக்கிழமை அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இந்த மாற்றத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடங்க்களிலிருந்து பணம் கிடைக்கலாம். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்: சனி நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி உங்களுக்கு தொழில் அல்லது வணிகத் துறையில் மகத்தான வெற்றியைத் தரும். வேலை தேடும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருளால் புதிய வேலை கிடைக்கும். சனிபகவான் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் பலனைத் தருவார். நீண்ட நாட்களாக நடந்து முடியாத பல வேலைகள் இந்த காலகட்டத்தில் முடிக்கப்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகமாகும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் சனியின் பெயர்ச்சியால் வேலை மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பெயர்ச்சி சுப பலன்களைத் தந்துள்ளது. சனி பகவானின் அருளால் நிதி நிலை மேம்படும். இதன் விளைவாக, பொருளாதார நிலை மிகவும் வலுவடையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உருவாகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.