மே 1 குரு பெயர்ச்சி: அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள ராசிகள் இவைதான், உங்க ராசி என்ன?
மேஷம்: தற்போது குரு பகவான் மேஷ ராசியில் உள்ளார். அவர் பெயர்ச்சியாகி ரிஷபத்திற்கு செல்ல உள்ளார். மேஷ ராசிக்காரர்களுக்கு இதனால் வாழ்க்கையில் பல வித வெற்றிகள் கைகூடும். பணியிடத்தில் மிகப்பெரிய நன்மை உண்டாகும். பண வரவு அதிகமாகும்.
ரிஷபம்: ரிஷப ராசியில் தான் குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மிகப்பெரிய முன்னேற்றத்தை எதிர்கொள்வீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை. புதிய முயற்சிகளை தொடங்கும் முன் பலமுறை யோசித்த பின்னர் தொடங்குவது நல்லது
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலவிதமான நல்ல செய்திகளை கொண்டு வர உள்ளது. பொருளாதார நிலை முன்பு விட நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பதவி உயர்வு ஊதிய உயர்வும் கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகத்தில் உள்ள சிம்ம ராசிக்காரர்கள் அதிக லாபத்தை ஈட்டுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்
கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பேச்சு பல வித நல்ல செய்திகளை கொண்டுவரும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த அனைத்து பணிகளும் இப்பொழுது வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். புதிய பணிகளை மேற்கொள்வீர்கள். அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.
துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை கொடுக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். வாழ்க்கை துணையுடனான புரிதலும் அன்பும் அதிகரிக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும்.
தனுசு: குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை கொண்டு வரும். சிறு சிறு உடல் உபாதைகள் வரலாம். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இவை சரியாகும். நிதி நெருக்கடி இருந்தாலும் சரியான வழியில் திட்டமிட்டால் பணத்தை சேமிக்க முடியும்
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல கால பிறக்கும். பணியிடத்தில் இருந்து வந்த தடைகள் சரியாகும். மேலதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் உடல்நிலையில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். சிறு அசவுகரியம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. பொருளாதாரத்தின் நிலை நன்றாக இருக்கும்
மீனம்: குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களை கொண்டு வரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். பணியிடத்தில் வெற்றி காண்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.