அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்பு
பிஎஃப் சந்தாதாரர்களுக்கான முக்கிய செய்தி. நிதி அமைச்சகம் பொது வருங்கால வைப்பு நிதியான GPF மற்றும் பிற வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. அரசாங்க சுற்றறிக்கையின் படி, ஜூலை செப்டம்பர் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 3 தேதியிட்ட அரசாங்க சுற்றறிக்கையில், நிதி அமைச்சகம், "2024-2025 ஆம் ஆண்டில், பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் பிற ஒத்த நிதி திட்டங்களுக்கான தொகைக்கு 7.1 என்ற விகிதத்தில் வட்டி செலுத்தப்படும் என்று பொதுவான தகவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 ஜூலை 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலத்தில் இந்த வட்டி சதவீதம் அளிக்கப்படும். இந்த விகிதம் ஜூலை 1, 2024 முதல் அமலில் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
3 அரசு 7.1 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்த திட்டங்களின் பட்டியல்: பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா), அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்), இந்திய ஆயுதத் துறை வருங்கால வைப்பு நிதி
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அரசாங்கம் 7.1 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்துள்ள திட்டங்களின் பட்டியலை இங்கே காணலாம்.
எனினும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றாமல் முன்னர் இருந்த அளவிலேயே தொடர்ந்துள்ளது. இதன்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு சேமிப்பு திட்டமான (Senior Citizen Savings Scheme) SCSS -க்கு 8.2% வட்டியும் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) NSC -க்கு 7.7% வட்டியும் கிடைக்கின்றன.
மாதாந்திர வருமான கணக்கு திட்டத்தில் (MIS) இந்த காலகட்டத்தில் 7.4 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இது தவிர செப்டம்பர் காலாண்டில் தொடங்கி, 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகைக்கு (Recurring Deposit)7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
GPF என்பது அரசாங்க ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இந்த கணக்கில் டெபாசிட் செய்கின்றனர். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அல்லது சூப்பர்ஆனுவேஷனின் போது மொத்தத் தொகையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
GPF திட்டம் 1960 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த திட்டம் சந்தைக்கு ஈடான வட்டி விகிதத்தை அளிக்கின்றது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றப்படுகின்றது.
9 இந்த அம்சம் இந்தத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டமாக்குகிறது. பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு இது ஒரு பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுவதோடு எதிர்பாராத நேரங்களில் நிலைத்தன்மையையும் இது அளிக்கின்றது.