நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!
மேஷம்: சனி நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்போர்கள். லாபம் அதிகமாகும். நிதி ஆதாயங்கள் கூடும். எனினும், சிறு உடல்நலப் பிரச்சனைகள், மன அழுத்தம் ஆகியவை ஏற்படலாம்.
ரிஷபம்: சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கதால் ரிஷப ராசிக்காரர்கள் அலுவலகத்திலும், வியாபாரத்திலும் சில புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இந்த காலத்தில் வீண் செலவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பல புதிய இடங்களுக்கு பயணம் செய்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும். இந்த காலத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். எதிரிகள் மூலம் சிறு தொந்தரவுகள் வரக்கூடும்.
கடகம்: சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்களுக்கு வேலை வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். இவற்றால் லாபம் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் பழைய முதலீடுகளின் மூலம் லாபம் பெறுவார்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இப்பொழுது முதலீடு செய்ய ஏற்ற காலமாக உள்ளது. இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி: சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயம் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். சிறு மன அழுத்தம் ஏற்படலாம்.
துலாம்: சனி நட்சத்திர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் வரலாம். குடும்பத்தில் முரண்பாடுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்: சனிப்பெயர்ச்சி தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் கூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகளால் ஆபத்துகள் ஏற்படலாம்.
தனுசு: சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்திலும் சமூகத்திலும் கௌரவம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். நிதிநிலை நன்றாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், ஆனால் இவை சுபச்செலவுகளாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் இப்பொழுது நடந்து முடியும். சிறு உடல்நிலை பிரச்சினைகள் இருக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். சனி நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும். மன குழப்பங்கள் இருந்தாலும் அவற்றில் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்: மீன ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியால் அதிகப்படியான லாபத்தை காண்பார்கள். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ஆதாயம் இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். எதிரிகளால் சிறு தொந்தரவுகள் வரலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.