இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை: கேட்டது கிடைக்கும், பண மழை பொழியும்
கிரக மாற்றங்கள்: பொதுவாகவே அனைத்துய் ராசிகளின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் மாற்றமும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
சனி பகவான்: அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கியமான கிரகம் சனி. இவர் மிக மெதுவாக நகர்வதால், ராசிகளில் இவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் தற்போது வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 அன்று அவர் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இது சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப விளைவுகளையும் ஏற்படுத்தும்.
ராசிகளில் தாக்கம்: அனைத்து கிரகங்களையும் போல, சனி பகவானின் வக்ர நிவர்த்தியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும், இந்த வக்ர நிவர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு மீண்டும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கத் தொடங்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிக பலன் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். புதிய வேலை தேடுபவர்களின் கனவு நனவாகும்.
மிதுனம்: சனியின் வக்ர நிவர்த்தியால் மிதுன ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றியைப் பெறலாம். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். மரியாதையும் புகழும் கூடும்.
துலாம்: சனியின் வக்ர நிவர்த்தியால் துலாம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்: சனியின் வக்ர நிவர்த்தியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலை அல்லது பதவி உயர்வுக்கான பலன்களைப் பெறலாம். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள், இதன் மூலம் பண வரவு அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்கலை உறுதிப்படுத்தவில்லை.