மேகனா ராஜுக்கு வளைகாப்பு; மறைந்த கணவரின் போஸ்டருடன் வெளிட்ட புகைப்படங்கள்...!
ஞாயிறன்று நடிகை மேகனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த புகைப்படங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பெரிய கட்-அவுட் ஒன்று மேகானாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உருக்கத்துடன் அவருக்கு வாஹ்ஸ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 7-ம் தேதி பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது மனைவியும் நடிகையுமான மேகனா ராஜ் அப்போது கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தியால் அவரது மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது.