பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தின நினைவலைகள் புகைப்படங்களாக
தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமைகளில் முக்கியமானவர்கள் அண்ணாவும், பெரியாரும்... அவர்களது பெயரை விட, அண்ணா, பெரியார் என்று மக்களின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்த ஆளுமைகள்...
அண்ணாவின் நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் இன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கட்சி சார்பின்றி பலரும் அண்ணாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்
அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சென்னை வாலாஜா சாலையில் இருந்து புறப்பட்டது. அண்ணா நினைவிடத்தில் அமைதி பேரணி நிறைவடைந்தது. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் அண்ணாவிற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக தொண்டர்களும் வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்’ என முழக்கமிட்ட அண்ணா, மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடியவர்...