ஆரோக்கியத்தைக் கெடுக்க ஆடியில் எரிப்பு நிலைக்கு சென்ற புதன்! உடல்நலக் குறைவால் பாதிப்பு??
ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், சிந்தனையும் செயலும் அருமையாக இருக்கும். தொழில் செய்பவரோ வேலை செய்பவரோ அவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால், அதுவே புதன் வலுவிழந்ந்து இருந்தால் பலன்கள் மாறுபடும்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால், சிந்தனை சீர்கெட்டுப் போகும். சிந்தனை சரியாக இருந்தாலும், அதை பொருத்தமற்ற இடத்தில் வெளிப்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதிலும் புதன் பலவீனமாக இருப்பவர்களுக்கு புதன் எரிப்பு நிலையில் இருந்தால் நிலைமை மிகவும் மோசம் தான்...
சிம்மத்தில் புதன் எரிப்பு நிலையில் இருக்கும் காலத்தில், கரியத்தடைகளை மேஷ ராசிக்காரர்கள் சந்திக்க நேரிடும், மேலும் தொழில் முன்னேற்றம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். பணம் இருந்தாலும் சரி, செலவழித்தாலும் சரி எதிலுமே திருப்தி இருக்காது. சேமிப்பு குறையும் நேரம் இது
வேலையில் அதிருப்தி ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் விரும்பிய முடிவுகளைத் தராமல் போகலாம், புதன் எரிப்பு நிலை கடக ராசியினருக்கு செலவுகளை அதிகரிக்கும்
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள எவ்வளவு தான் முயன்றாலும், புதன் எரிப்பு நிலை அதைத் தடுக்கும். அதிக செலவுகள் ஏற்படும் என்பதால் சேமிப்பதற்கான வாய்ப்பு குறையும், மனதில் சோர்வு ஏற்படும்
துலாம் ராசியினருக்கு வேலையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். சம்பளம் அதிகரிக்கும் என்ற ஆசையும் நிறைவேறாது. இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும், அது மனதில் கவலையை அதிகரிக்கும், தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் குறையும், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது