புதன் குரு வக்ர நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்... ஜாக்கிரதையாக இருங்க!
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களின் நிலையும், 12 ராசிக்காரர்களின் வாழ்வில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அது சுபமாகவும் இருக்கலாம், அசுபமாகவும் இருக்கலாம்.
இந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்கள் பல்வேறு ராசிகளுக்கும், நட்சத்திரங்களுக்கும் பெயர்ச்சி ஆகின்றன.
அதில் வரும் நவ. 26ஆம் தேதி புதன் வக்ர நிலைக்கு மாற்றமடைகிறார். அதே நேரத்தில் குரு பகவானும் ஏற்கனவே வக்ர நிலையில்தான் இருக்கிறது.
அந்த வகையில், புதன் குரு வக்ர நிலையில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என்றாலும், இந் 3 ராசிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் கூடுதல் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மேஷம்: புதன் மற்றும் குரு பகவானின் வக்ர நிலையால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம். இந்த காலகட்டத்தில் நீங்கள் நம்பிக்கையை இழப்பீர்கள். வேலையில் பிரச்னைகள் அதிகரிக்கலாம். தற்போதைக்கு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம், நினைத்த பலன்கள் கிடைக்காமல் கூட போகலாம். உங்கள் செலவுகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம்.
கடகம்: இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்கள் தங்களது வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பணியிடத்தில் நீங்கள் கூடுதல் சிரத்தையுடன் இருக்க வேண்டும். பிறருக்கு உங்கள் பணத்தில் கடன் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். மன அழுத்தத்தை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உடல்நலனிலும் பிரச்னைகள் வரலாம்.
துலாம்: இந்த ராசிக்காரர்களின் பொருளாதார சூழலில் மிகவும் பாதிக்கப்படலாம். திருமணம் செய்தோரின் வாழ்விலும் பிரச்னைகள் வரலாம். வணிகம் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்திலும் சச்சரவு வரலாம். வேலையிலும், உங்கள் முதலாளியிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.