புதன் உதயத்தால் ராஜயோகம்! தீபாவளிக்கு செலவு செய்ய அள்ளிக் கொடுப்பார் புத பகவான், எஞ்ஞாய்!
நவகிரகங்களில் புதன் மிகவும் முக்கியமானவர், இவர் கிரகங்களின் இளவல், இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் இவர் மிகவும் துரிதமாக இயங்கக்கூடியவர்...
ஒருவரின் ஜாதகத்தில் புதன் எந்த ராசியில் இருக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே வாழ்க்கையில் அவர்களின் நிலைமை, அத்தியாவசிய பொருட்கள், ஆரோக்கியம் அனைத்தும் கிடைக்கும்.
மனதை வலுவாக வைத்துக் கொள்ளல்வும், வாழ்க்கையில் நேர்மறையான முடிவுகளைக் எடுக்கவும் புதன் தான் காரணமாகிறார். ஏனென்றால் இவரே, ஞானத்தையும் அறிவார்ந்த வாழ்க்கையையும் கொடுக்கும் அறிவுக்காரகர் ஆவார்.
அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 6.58 மணிக்கு துலாம் ராசியில் புதன் உதயமாகிறார். புதன் உதயத்தின் பலன் 3 ராசிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். துலாமில் உதயமாகும் புதனால் எந்த ராசிக்காரர்கள் மகத்தான பலன்களைப் பெறுவார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
புதனின் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வந்துச் சேர்க்கும். பொருளாதார நிலை மேம்படும். தொழில், வேலை என உங்கள் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் அதிர்ஷ்டம் உங்களைத் தூக்கிவிடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாய் சரியாகும்
கன்னி ராசிக்காரர்களுக்கு துலாம் ராசியில் உதயமாகும் புதன், நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவார். எல்லா துறைகளிலும் வெற்றி, தொட்டதெல்லாம் துலங்குவது என மகிழ்ச்சி உங்களை அரவணைக்கும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும்
புதன் உதயமாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். வாழ்வில் புதிய நல்ல மாற்றங்கள் தென்படும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வயதானவர்களின் ஆசி கிடைக்கும் காலமிது. தொழிலிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது