புதன் உதயம்... ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..!!
புதன் உதயம்: புத்திக்கூர்மை, வியாபாரம், பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு அதிபதியாக உள்ள புதன் ஜூன் 27 ஆம் தேதி, புதன் மிதுனத்தில் உதயமாக இருக்கிறார். அதன் பிறகு ஜூன் 29 ஆம் தேதி, புதன் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
அதிர்ஷ்ட ராசிகள்: புதனின் உதயத்தாளும், அதன் பிறகு நிகழும் புதன் பெயர்ச்சியிலானலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். இந்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்
ரிஷபம்: மிதுனத்தில் புதன் உதயமாகும் போது, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களை நிரூபிப்பதில் வெற்றி பெறுவீர்கள். நிறைய பணம் சம்பாதிப்பதைத் தவிர, சேமிப்பிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும்.
மிதுனம்: புதனின் அருளால், வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு வாங்கலாம். வேலை, தொழில், வியாபாரம் அனைத்திலும் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் பெருகும். நீங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் அதிக வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்: புதன் உதயமானது சிம்ம ராசிகளுக்கு சாதகமான பலன்களைப் பெற நல்ல நேரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். தொழிலதிபராக வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
கன்னி: புதனின் உதயத்தினால், கன்னி ராசிகளின் முழு கவனமும் வேலையில் வெற்றி பெறுவதில் இருக்கும். உங்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். நீங்கள் நிதி நன்மைகளையும் பெறலாம். பொருளாதார நிலை வலுவடையும்.
கும்பம்: மிதுன ராசியில் புதன் உதயமாகும் காலகட்டத்தில் உங்கள் IQ அதிகரிக்கும். உங்கள் அறிவுத் திறனால் வெற்றிகளை குவிப்பீர்கள். சிலருக்கு ஷேர் மார்க்கெட்டில் லாபம் கிடைக்கும். அதிக பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது தவிர, பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.