சொந்த ராசியில் உச்சமான புதன்! சூரியனுடன் சேரும் நெருப்பு கிரகத்தின் 12 ராசிகளுக்கான கன்னி புதன் ராசிபலன்!
சூரியனும் புதனும் கடகத்தில் இருந்தபோது, முதலில் சூரியன் பெயர்ச்சியாகி செப்டம்பர் 16ம் தேதி கன்னிக்கு சென்றார். ஒரு வாரம் கழித்து 23ம் தேதியன்று புதனும் கன்னிக்கு சென்றுவிட்டார். இந்த பெயர்ச்சியால் யாருக்கு என்ன நடக்கும்? தெரிந்துக் கொள்வோம்
மன உளைச்சல் அதிகமாகும் என்பதால் முடிந்த அளவு அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம்
வெளியூர் பயணங்களால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் மனதில் நிம்மதி கிடைக்கும்
சுபகாரிய முயற்சிகள் கைகூடும், இந்த புதன் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். வாழ்க்கைக்கான முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரமாக இருக்கலாம்
மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், வேலைச் சுமை கடுமையாய் இருப்பதால் சோர்வு ஏற்படும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முயற்சிக்கவும்
புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் நாட்டம் ஏற்படும்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், சொத்து வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும், புதன் பெயர்ச்சி துலாமிற்கு நன்மை செய்யும்
கன்னியின் அதிபதியான புதன், தனது சொந்த ராசிக்காரர்களுக்கு நல்லதையே செய்வார். புதாதித்ய யோகமும் கூடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் கன்னி ராசி சஞ்சாரம் மனதில் உள்ள பல கவலைகளை தீர்த்து வைக்கும், ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தவும்
கடக ராசியினருக்கு புதனின் கன்னி ராசி சஞ்சாரம் பலவிதங்களில் நன்மை கொடுக்கும். நினைத்தது நிறைவேறும்
மனதில் நினைத்தது எல்லாம் நிறைவேறும் என்று சொல்ல முடியாது, ஆனால் சில விஷயங்கள் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல நடைபெறும்
சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்
சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது