MI vs CSK: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு! முக்கிய வீரர் விலகல்!
இன்று ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் 2024 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மாதீஷா பத்திரனா காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கேயின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பத்திரனா அணியில் இருப்பது முக்கியம். ஆனால் அவரது பிட்னஸ் மிகவும் முக்கியம். எதுவும் எங்கள் கையில் இல்லை என்று கூறியுள்ளார்.
பத்திரனா 2022 முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2023ல் 12 போட்டிகளில், அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் முக்கிய பவுலராக இருந்து வருகிறார்.
பத்திரனா இல்லாததால், மும்பையைச் சேர்ந்த ஷர்துல் தாக்கூர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. KKR க்கு எதிரான போட்டியில் விளையாடிய தாகூர் மூன்று ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.