Diabetes Control Tips: இன்றைய அவசர உலகில் மாறிவரும் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித நோய்கள் மனிதர்களை ஆட்கொள்கின்றன. அவற்றில் நீரிழிவு நோயும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு, சிலருக்கு மட்டுமே காணப்பட்ட நீரிழிவு நோய் இன்று பலரிடம் காணப்படுகின்றது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு முறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், சில பழக்கவழக்கங்கள், மற்றும் முறையான சிகிச்சை மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாத உணவுகளை தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். குறிப்பாக அசைவ உணவுகளான ரெட் மீட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு விஷம் போல கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட உணவுகளால் கொலஸ்ட்ராலை அதிகரித்து பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நீரிழிவு நோயாளிகளுக்கு சைவ உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவை அவர்களது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில சூப்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சைவ சூப்கள் குளுக்கோஸ் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
இரத்த சர்க்கரை அளவை குறைகக் உதவும் சூப்கள்:
1. தக்காளி சூப் (Tomato Soup)
தக்காளி சூப் தயாரிக்க, தக்காளி சாறு, இரண்டு சிவப்பு மிளகாய், சுவைக்கு தகுந்த உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நசுக்கிய பூண்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். சிறிது நேரம் கெஸ் அடுப்பை சிம்மில் வைக்கவும். பின் அடுப்பை அணைத்து, சூப் சற்று சூடு ஆறும் வரை காத்திருக்கவும். பின் இதை மிக்சியின் பிளெண்ட் செய்யவும். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை கேஸில் வைத்து சூடாக்கி கருப்பு உப்பு சேர்த்து பருகலாம்.
2. மசூர் பருப்பு சூப் (Masoor Dal Soup)
மசூர் பருப்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மசூர் பருப்பை பல வழிகளில் சமைக்கலாம். சூப் செய்ய, முதலில் ஊறவைத்த மசூர் பருப்பு, வெங்காயம், கேரட், குடைமிளகாயை எடுத்து அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். அதன் பிறகு, சுவை சேர்க்க, இதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகளை சேர்க்கவும். பருப்பு நன்றாக வெந்தவுடம் ஒரு முறை பிள்ண்ட் செய்து பின்னர் இதை குடிக்கலாம்.
3. காளான் சூப் (Mushroom Soup)
காளான் சூப் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். இதற்கு, ஒரு கப் காளான், ஒரு ஸ்பூன் கோதுமை மாவு, அரை கப் குறைந்த கொழுப்புள்ள பால், அரை கப் நறுக்கிய வெங்காயம், ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சுவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, முதலில் வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், அனைத்து பொருட்களையும் சேர்த்து அரை கப் தண்ணீரை விடவும். 6 முதல் 7 நிமிடங்கள் சமைத்த பிறகு அடுப்பை அணைக்கவும். இப்போது இந்த கலவையை பாலில் சேர்த்து பிளெண்ட் செய்துகொள்ளவும். அதன் பிறகு, கடாயில் சமையல் எண்ணெய் சேர்த்து, என்ணெய் சூடானவுடன் இந்த கலவையை அதில் சேர்த்து குறைந்த தீயில் சிறிது நேரம் சமைத்து பின் உட்கொள்ளவும்.
இந்த சூப்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக ஏற்றவை. இவை இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ