Migraine: ஒற்றை தலைவலிக்கு தீர்வாகும் `சூப்பர்’ உணவுகள்!
ஒற்றைத் தலைவலி என்பது பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடித்து அன்றாட வாழ்க்கை பணிகளை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலிக்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்து கொள்வது தான். ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். சில உணவுகள் ஒற்றை தலைவலியை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிறந்தவை.
உடலுக்கு நீர்சத்த்தினி வழங்கி, வயிற்று பிரச்சனையையும் போக்கும் மற்றொரு முக்கிய பானம் மூலிகை தேநீர். இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது, ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். மேலும், புதினா இலை சேர்த்த தேநீர் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பல நேரங்களில் ஒற்றைத் தலைவலி ஏற்பட வயிறு தொடர்பான பிரச்சனை, நீரிழப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில், தயிரை உனவில் வழக்கமாக சேர்த்துக் கொள்வது, செரிமானம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை நீக்குவதோடு, நீரிழப்பைக் கட்டுப்படுத்தி தலைவலி ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைகிறது.
கடல் மீனில் போதுமான அளவு ஒமேகா 3 உள்ளதால், உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடல் உணவில், குறிப்பாக மீன் உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள நிலையில், இது ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி போன்றவை மெக்னீசியம் நிறைந்தவை. மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. எனவே இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலி பிரச்சனை படிப்படியாக குறையும்.