தங்க மங்கையின் பதக்கம் பெற்ற வெற்றித் தருணங்களின் புகைப்படத் தொகுப்பு
![மீராபாய் சானு 49 kg Women category](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/31/251051-2960006714388056681761897974464619654619974n.jpg?im=FitAndFill=(500,286))
காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனையுடன் பெண்களுக்கான 49 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார் மீராபாய் சானு
![ஸ்னாட்ச் முறையில் 88 கிலோ எடை weight lifting](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/31/251050-2962197314445148775717145432914022437062887n.jpg?im=FitAndFill=(500,286))
ஸ்னாட்ச் முறையில் 88 கிலோ எடையைத் தூக்கி, அதைத் தொடர்ந்து 113 கிலோ எடையுடன் க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 201 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்த சானு மகுடம் சூடினார்.
![2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்ட் Mirabai Chanu](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/31/251049-2962197314445148775717145432914022437062887n.jpg?im=FitAndFill=(500,286))
2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு
ஸ்னாட்ச் சுற்றில் சாதனையைப் படைத்த பிறகு, சானு க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 113 கிலோ தூக்கி, தனது ஒட்டுமொத்த லிப்டை 201 கிலோவாக எடுத்து புதிய சாதனை படைத்தார்
மீராபாய் சானு, 48 கிலோ மற்றும் 49 கிலோ பெண்கள் பிரிவுகளில் காமன்வெல்த் விளையாட்டு சாதனையை முறியடித்துள்ளார்.
நான் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் காமன்வெல்த் விளையாட்டு சாதனையை 48 கிலோவில் முறியடித்தேன், இப்போது நான் அதை 49 கிலோவில் செய்துள்ளேன்: மீராபாய் சானு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார் மீராபாய் சானு