அலுவலகத்தில் டென்சனா? முதுகுவலியா? சுலபமா இந்த டாப் 5 யோகாகளை செய்யலாமே?
சமநிலையற்ற வேலை வாழ்க்கை காரணமாக, யோகா பயிற்சி செய்வதற்கு அதிக நேரம் கிடைப்பதில்லை, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக வழக்கமான மேசை வேலைகளைச் செய்வதால் முதுகுவலி, தோள்பட்டை, கழுத்து வலி மற்றும் கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்
உடல் மற்றும் மன வளர்ச்சியில் யோகா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் அசௌகரியத்தைத் தவிர்க்க உங்கள் பணியிடத்தில் செய்யக்கூடிய ஐந்து யோகாசனங்கள்
உட்கார்ந்து தடாசனம் செய்வது கைகள் மற்றும் தோள்களின் தசைகளை தளர்த்த உதவும், கணினியின் முன் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் விறைப்பு அடையும் தசைகளைத் தளர்த்த, கைகளை உங்கள் தலைக்கு மேலே உயர்த்தவும், உங்கள் முழங்கைகள் உங்கள் காதுகளுக்கு நெருக்கமாக இருப்பதை உறுதிசெய்து, கைகளை முடிந்தவரை நீட்டி, உங்கள் கட்டைவிரலை உங்கள் தலையின் பின்புறம் வளைக்கவும். இந்த நிலையில், 3-5 முறை ஆழமாக சுவாசிக்கவும்.
இடுப்பின் சமநிலையின்மையை போக்க, 'சேர் யோகா' போஸ் உதவும். உங்கள் இடது கணுக்காலை உங்கள் வலது முழங்காலில் வைத்து, உங்கள் முதுகை நேராக வைத்து, உயரமாக உட்கார்ந்து, உங்கள் கணுக்கால் மற்றும் முழங்கால் ஒரு நேர் கோட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 7-10 முறை ஆழமாக சுவாசிக்கவும். முடிந்தால் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் போது சற்று முன்னோக்கி குனியவும்.
உடல் ஓய்வெடுக்கவும், நீண்ட நேரமாக வேலை செய்த பிறகு மனம் புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது. நேராக உட்கார்ந்து, உங்கள் கைகளை உங்கள் தொடைகளின் மீது வைத்து, உங்கள் கண்களை மூடிக்கொண்டு மூச்சை ஆழமாக இழுத்துவிட்டால் மனம் புத்துணர்ச்சியும் பெறும்
கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்த பிறகு, எளிதான மற்றும் மிகவும் நிதானமான உடற்பயிற்சிகள், உடல் விறைப்பை எளிதாக்க உதவும்.