TikTok இல்லை என்றால் என்ன? இதோ இந்தியாவின் சூப்பரான 6 apps உங்களுக்காக…
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels)
Instagram Reels செயலியில் பிரபலமான பாடல்களுக்கு வீடியோக்களை உருவாக்க உதவுகிறது. ஆனால் 15 வினாடிகள் மட்டுமே வீடியோ உருவாக்க முடியும். இன்ஸ்டாகிராமின் 45 சதவீத கிளிப்புகள்,15 வினாடிகள் அல்லது அதை விட குறைவாக இருப்பதன் அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடு அம்சம் இருப்பதாக இன்ஸ்ட்ராகிராம் கூறுகிறது. (Photograph:Twitter)
Inshort's public
இந்த ஆண்டு ஜனவரியில் Inshort's public தொடங்கப்பட்டது. இது இருக்கும் இடத்தின் அடிப்படையிலான social network என்பது குறிப்பிடத்தக்கது. இது தங்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை சிறிய வீடியோக்களாகப் பதிவுசெய்து பகிர அனுமதிக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குள் 10 மில்லியன் பயனர்கள் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது விரைவில் இந்தியர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் இந்திய தயாரிப்பாகும். (Photograph:Others)
Chingari app இந்தியாவால் 59 applications தடை விதிக்கப்பட்டதால் பெரும் உத்வேகம் பெற்ற இந்திய app களில் முக்கியமான ஒன்று சிங்காரி. டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்டுள்ள சிங்காரியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 10 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்
(Photograph:Others)
Bolo Indya Bolo Indya, இந்தியாவின் குருகிராம்-இல் இருந்து இயங்கும் ஒரு உள்நாட்டு செயலி. TikTok தடைக்குப் பிறகு, ஏற்கனவே இருந்த பயனர்களை விட மூன்று மடங்கு மக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். டிக்டாக்கிற்கு உகந்த மாற்று செயலி Bolo Indya (Photograph:Others)
HiPi
Zee குழுமத்தின் அண்மை வெளியீடான HiPi, டிக்டாக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ள செயலி (Photograph:Twitter)
Roposo ஆண்ட்ராய்டில் 80 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவிறக்கம் செய்திருக்கும் செயலி Roposo. டிக்டாக் தடைக்கு முன்னதாக இதன் பயனர் எண்ணிக்கை 50 மில்லியன் என்ற அளவில் இருந்தது. (Photograph:Others)