விராட் கோலி இருந்தால் இப்படி செஞ்சிருப்பீங்களா? பாட் கம்மின்ஸூக்கு முகமது கைஃப் சரமாரி கேள்வி

Sun, 07 Apr 2024-1:05 pm,

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. கடைசி நேரத்தில் ஐதராபாத் அணியின் அபார பவுலிங் காரணமாக சிஎஸ்கே அணியால் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறியது.

குறிப்பாக 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் வேகத்தை குறைத்து பவுலிங் செய்து அசத்தினார். அந்த ஓவரின் 4வதி பந்தில் புவனேஷ்வர் குமார் களத்தில் நின்ற ஜடேஜாவுக்கு மிகச்சிறந்த யார்க்கர் பந்தை வீசினார். அந்த பந்து நேராக புவனேஷ்வர் குமாரின் கைகளுக்கு சென்றது. அப்போது ஜடேஜா க்ரீஸில் இருந்து வெளியே வர, உடனடியாக புவனேஷ்வர் குமார் ரன் அவுட் செய்வதற்காக ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார்.

அப்போது க்ரீஸிற்கு திரும்ப ஜடேஜா திரும்பிய போது, மொத்தமாக ஸ்டம்பை மறைத்தார். இதனால் அந்த பந்து ஜடேஜாவின் முதுகில் அடித்து சென்றது. இதனால் அதிருப்தியடைந்த ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன், நடுவர்களிடம் ஃபீல்டிங் செய்ததை தடுத்ததாக அப்பீல் செய்தார். ஆனால் கேப்டன் கம்மின்ஸ் அந்த அப்பீலை திரும்ப பெற்றார்.

இது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜடேஜாவுக்கு எதிராக ஃபீல்டிங் செய்வதை தடுத்த அப்பீலை திரும்ப பெற்ற கேப்டன் கம்மின்ஸிடம் இரு கேள்விகளை கேட்க தோன்றுகிறது. 

ரன்கள் சேர்க்க தடுமாறி வரும் ஜடேஜாவை களத்திலேயே இருக்க வைத்து, தோனியை களமிறக்காமல் இருப்பதற்காக செய்யப்பட்ட யுக்தியா இது? அதேபோல் டி20 உலகக்கோப்பையில் விராட் கோலிக்கும் இப்படியான அப்பீலை கம்மின்ஸ் திரும்பப்பெறுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனென்றால் கடைசி 5 ஓவரில் களத்தில் இருந்த ஜடேஜா 23 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். அவரால் கொஞ்சம் கூட எந்த பந்தையும் மிடில் ஆஃப் தி பேட்டில் அடிக்க முடியவில்லை. உனாத்கட், புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களுக்கு எதிராக தோனியால் வெளுத்து கட்ட முடியும் என்பதால், கம்மின்ஸ் இப்படியொரு திட்டத்தை அரங்கேற்றியதாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link