என்னை பற்றி பொய் செய்தி பரப்பாதீர்கள் - முகமது ஷமி

Thu, 03 Oct 2024-1:51 pm,

இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் முகமது ஷமி கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறார்.

காயம் காரணமாக அவர் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை தொடரில் கூட பங்கேற்க முடியவில்லை

தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்துக்கு சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கும் அவர், மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியிருக்கிறார்.

ஆனால், அவர் எப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை

முழு உடல் தகுதியை எட்டாத காரணத்தால் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கும் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியானது.

ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் முகமது ஷமி. என்னைப் பற்றி பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்

உடல் தகுதி குறித்து நான் அல்லது பிசிசிஐ தரப்பில் தெரிவித்தால் மட்டுமே அது உண்மை, அதுவரை கற்பனைகளை செய்திகளை போட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார் முகமது ஷமி. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link