Money Plant: மணி பிளாண்ட் நடும் போது மறந்தும் செய்யக்கூடாதவை

Wed, 11 May 2022-6:46 pm,

மணி பிளாண்டை சரியான திசையில் வைக்க வேண்டும். பல சமயங்களில் வாஸ்துப்படி தென்கிழக்கு பகுதியில் மணி பிளாண்ட் வைப்பது சிறந்தது. இது அக்னி மூலை என்றும் அழைக்கப்படுகிறது. 

 

மணி பிளாண்டை நடும் போது அதன் இலைகள் தரையில் விழாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, மணி பிளாண்டின் தண்டு பகுதியை கயிற்றால் உயரமாக தூக்கி கட்டலாம். 

மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். வீட்டிற்குள் நேரடியாக யாரும் பார்க்க முடியாத இடத்தில் செடியை வைக்கவும். மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே நட்டால், அதன் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

வாடிய மணி பிளாண்டை வீட்டில் வைத்திருப்பதால் பலன் ஏதும் இல்லை. அவ்வாறு செய்வது வறுமையை வீட்டிற்குள் வரவழைக்கும். 

 

உங்கள் வீட்டில் நிறுவப்பட்ட மணி பிளாண்டை மற்றவர்களுக்கு பரிசளிக்க கூடாது. அவ்வாறு செய்வதால், லட்சுமி வேறொருவரின் வீட்டிற்குச் செல்கிறாள், அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது. 

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. Zee Media இதற்கு பொறுப்பேற்காது)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link