உடலுறவு மூலம் பரவும் கொடிய வைரஸ்... வல்லுநர்கள் எச்சரிக்கை!

Sun, 28 Apr 2024-8:33 pm,

2020ஆம் ஆண்டு என சொன்னால் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும் என இந்த உலகில் உள்ள யாரை கேட்டாலும் அடுத்த நொடியே கூறுவார்கள், கொரோனா வைரஸ் என்று... அந்தளவிற்கு இந்த கொரோனா வைரஸ் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

பொருளாதார ரீதியாகவும் சரி, உடல்நிலை ரீதியாகவும் சரி யாருமே எதிர்பார்க்காத தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருந்தது. ஒரு வைரஸ் இந்த உலகத்தை என்ன செய்துவிடும் என்று யாரும் இனி கேட்டுவிட முடியாது. அந்த வகையில், தற்போது குரங்கம்மை (Monkeypox) என்ற வைரஸின் புதிய வேரியண்ட் குறித்த தகவல் ஆய்வில் மூலம் வெளிவந்துள்ளது. 

அதாவது, குரங்கம்மை வைரஸின் வேரியண்ட் உடலுறவு மூலம் பரவும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு உலகளவில் இந்த வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து இந்த ஆய்வு மேர்கொள்ளப்பட்டது. கிளேட் 1 என கண்டறிப்பட்ட இந்த வைரஸ் மாறுபாடு மத்திய ஆப்பிரிக்கா பகுதியில் சிறிய சமூகத்தினுள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இருப்பினும், சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட கிளேட் 1 வைரஸ். காங்கோ ஜனநாயகக் குடியரசில் தொற்றுநோய்களின் தொகுப்புடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. இப்பகுதியில் இருக்கும் காலரா போன்ற பிற நோய்களின் பரவலால் இந்த சூழ்நிலை என்பது மேலும் சிக்கலாக்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

குரங்கம்மை தொற்று ஏற்பட்டால் கடுமையான வலி ஏற்படும் என்றும் தோலில் சீழ் போன்ற திரவம் வடியும் புண்கள் ஆகியவை ஏற்படும் என்றும் கடுமையான சூழ்நிலைகளில் மரணமும் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.  

 

குறிப்பாக, மத்திய ஆப்பிரிக்கா பகுதியில் காட்டு விலங்குகளில் இந்த வைரஸ் தொடர்ந்து இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு நைஜீரியாவில் இந்த தொற்று பரவியது. இது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மையை கொண்டது. குறிப்பாக, இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் வைரஸின் வேறுபாடை ஒத்தாகும். 

 

2022ஆம் ஆண்டில் உலகளவில் இந்த தொற்று பரவியதற்கு பாலியல் தொடர்புகளும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தொற்று பரவல் அதன் தற்போதைய வரம்புகளுக்கு அப்பால் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link