மியான்மரில் புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடும் புத்த பிட்சுக்கள்
நீண்ட வரிசையில் வரிசையாக மொத்தம் 10,264 துறவிகள் வரிசைக் கிரமமாக அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
(Photograph:AFP)
சிவிலியன் தலைவர் ஆங் சான் சூ கியை பதவி நீக்கம் செய்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில துறவிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தரின் பிறந்தநாளுக்கு முன்னதாக, ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்த மாண்டலே துறவிகளின் குழு, ஆட்சிக்குழு ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என மக்களையும் புத்த பிட்சுக்களையும் வலியுறுத்திய நிலையில் இந்த் நிகழ்வில் புத்தமதத் துறவிகள் பலர் கலந்துக் கொண்டனர். (Photograph:AFP)
2019ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் புத்தரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் 30,000 துறவிகள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
ராணுவ ஆட்சி ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் பங்கேற்பது அரசியல் ரீதியாலனது அல்ல என்றும், மதகுருமார்கள் அன்பின் பெயரில் வந்ததாகவும் மாண்டலே துறவி உக்கா நியானா தெரிவித்தார். (Photograph:AFP)
மியான்மரில் மதகுருமார்கள் வாக்களிப்பதையோ அல்லது அரசியல் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதையோ துறவறச் சட்டம் தடை செய்கிறது.
ஆனால் பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் உள்ள துறவிகள் உயர்ந்த தார்மீக அதிகாரம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள், (Photograph:AFP)
மியான்மர் இராணுவம் 2017 இல் சிறுபான்மை முஸ்லிம் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னர், வன்முறையில் இருந்து தப்பிக்க சுமார் 740,000 பேர் அண்டை நாடான பங்களாதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
2021 ஆட்சிக்கவிழ்ப்பு துறவிகளிடையே உள்ள பிரிவுகளை அம்பலப்படுத்தியது, (Photograph:AFP)