ரிஷபத்தில் சந்திரன் - குரு... உருவாகும் கஜகேசரி யோகம் - இந்த 4 ராசிகளின் காட்டில் பண மழை தான்
சந்திரன் வரும் நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3:17 மணியளவில் ரிஷப ராசிக்குள் நுழைகிறது. வரும் நவ.18ஆம் தேதி அதிகாலை 4:31 மணி வரை அந்த ராசியில் சந்திரன் தங்குவார்.
ரிஷப ராசியில் சந்திரன் தங்கும் அந்த நேரத்தில், அந்த ராசியில் குரு பகவானும் இருப்பார். அந்த வகையில், சந்திரன் மற்றும் குரு பகவான் இரண்டும் (Moon Jupiter Conjuction) சேர்ந்த கஜகேசரி யோகம் (Gajkesari Yoga) உருவாகும்.
இந்த கஜகேசரி யோகத்தால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சுபமான காலம் பிறக்கிறது எனலாம். இந்த குறுகிய காலகட்டத்தில் இந்த நான்கு ராசிக்கரார்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
ரிஷபம்: சந்திரன் மற்றும் குரு பகவான் இணைவதால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் முதலில் ரிஷப ராசிக்காரர்களுக்குதான் (Taurus) அதிக நன்மைகளை அளிக்கும். வணிகர்களுக்கு நற்செய்தி வரலாம், அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. முன்பை விட பொருளாதார நிலைமை சீரடையும். எதிர்காலத்திற்கு பலனளிக்கும் வகையில் பணியிடத்தில் புத்தம்புதிய வாய்ப்புகள் உருவாகும். உடல்நலமும் நலமுடன் இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களில் (Cancer) வணிகம் செய்பவர்களுக்கு பெரிய பெரிய ஆர்டர்கள் வரலாம், இதன்மூலம் லாபம் பெருகலாம். நீங்கள் பணியாற்றும் துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் நேரம் உங்கள் பக்கம் இருக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய வேலையை தொடங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை இந்த நேரத்தில் தொடங்கலாம். அதில் நல்ல பலனும் கிடைக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு (Sagatarrius) எதிர்பார்த்திருந்த புதிய வேலை கிடைக்கும். இதனால் உங்களுக்கு புது வருவாயும் உண்டாகும், நிதி நிலைமையும் வலுவாகும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம், இதனால் சம்பளமும் உயரலாம். பாதியில் நின்ற விஷயங்கள் இந்த நேரத்தில் முழுமை பெற்று, அதில் வெற்றியும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்: வேலையிடத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு (Pisces) நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். குடும்ப பிரச்னைகள் தீர்ந்து, உறவுகள் வலுவாகும். ஆன்மீக நாட்டம் உயரும். நேரம் நன்றாக இருப்பதால் முதலீட்டில் நல்ல வருவாய் எதிர்காலத்தில் வரும். பொருளாதார நிலை இன்னும் வலுவாகும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.