100 ஆண்டுக்கு பிறகு சந்திர கிரகணம்: இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை

Wed, 20 Mar 2024-2:32 pm,

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம்  மிகவும் சாதகமான பலனைத் தரும். வேலையில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். நிதி ஆதாயமும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். நல்ல அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

ஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலனைத் தரும். செல்வம் பெருகும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சிறப்பு பலனைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கலாம். தொழில், வியாபாரம் சிறப்பாக செயல்படும். பணியிடத்தில் நினைத்த பதவி உயர்வு கிடைக்கும். முழு பலனைப் பெறுவீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் மகிழ்ச்சி உண்டாகும். வெற்றி மழை பொழியும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம். பொருள் வசதி அதிகரிக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சுப பலனைத் தரும். நிதி ஆதாயம் உயரும். நல்ல வாய்ப்புகளை பெறலாம். வேலையில் நல்ல பலன்களைப் பெறலாம். மரியாதையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பண வரவு உண்டாகும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link