குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள்... புத்தாண்டில் பொற்காலம்
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானுக்கு விசேஷ இடம் உண்டு. இவர் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை இருந்தால் அவர் வாழ்வில் அனைத்து வித செல்வங்களையும் நன்மைகளையும் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. கல்வி, செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள், செல்வம் என அனைத்துக்கும் அதிபதியாக இருப்பவர் குரு பகவான்.
குரு பகவான் அக்டோபர் 9, 2024 அன்று, ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். அவர் பிப்ரவரி 5, 2025 வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். அதன் பிறகு மே மாதம் குரு பகவான் மிதுன ராசிடில் பெயர்ச்சி ஆகிறார். இது 2025 ஆம் ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கபடுகின்றது.
2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாத குரு வக்ர நிவர்த்தி மற்றும் மே மாத குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தியும் குரு பெயர்ச்சியும் பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித்தரும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளையும் பெறலாம். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், திருமணத்திற்காக காத்திருப்போருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் திறக்கும். 2025ல் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். எதிர்காலத்திற்காகவும் சேமிக்க முடியும். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் அமையும். பணியில் பாராட்டும் மரியாதையும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில், முதலீடும் நன்மை பயக்கும். பங்குச்சந்தை அல்லது லாட்டரியில் லாபம் கிடைக்கும்.
சிம்மம்: குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் 2025 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். படிப்பிலும் வெற்றி பெறுவீர்கள். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்களுடன் நல்ல உறவு இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் தொழிலிலும் புதிய உயரங்களை அடையலாம். வருமானம் அதிகரிக்கும்.
துலாம்: குரு பெயர்ச்சியால் துலா ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்விக்கு தயாராகி வருபவர்களுக்கு இக்காலம் மிகவும் ஏற்றது. புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். வேலையில் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.
குரு பகவானின் பரிபூரண அருளைப் பெற, 'குரவே சர்வ லோகானாம், பீஷஜே பவரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம், தக்ஷிணாமூர்த்தயே நமஹ' என்ர ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.