மீனத்தில் சனி ராகு சேர்க்கை: 2025 புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி பொங்கும்
2025 ஆம் ஆண்டு நீதியின் கடவுளான சனிபகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 25 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
நிழல் கிரகமான ராகு இப்பொழுது மீன ராசியில் உள்ளார். சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனவுடன் மீன ராசியில் சனியும் ராகமும் இணைவார்கள்.
சனி மற்றும் ராகுவின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதன் காரணமாக அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத பண வரவு இருக்கும். அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: சனி மற்றும் ராகுவின் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் வெற்றிகள் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். பெரிய முதலீடுகளால் பயன்பெறுவார்கள்.
மிதுனம்: சனி மற்றும் ராகுவின் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்கள் ஆக்கப்பூர்வமான நன்மைகளை பெறுவார்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் பல வெற்றிகள் உண்டாகும். வியாபாரத்தை விஸ்தரிக்க வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் ராகுவின் சேர்க்கை சுபமான விளைவுகளை அளிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும்.
மீனம்: சனி, குரு சேர்க்கை மீன ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளை அள்ளித் தரும். உங்கள் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பல வித பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகளை பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமா பாஸம், ரவிபுத்ரம் யமாக் ரஜம்; சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி ஸனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர ஏழை எளியவர்களுக்கு உதவும் நபர்களை சனி பகவான் காத்து ரஷிக்கிறார்.
ராகு பகவானின் அருள் பெற, 'அர்த்த காயம் மகா வீர்யம், சந்திராத்ய விமர்தநம்; சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம், தம் ராகும் ப்ரணமாம்யஹம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்வது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.